மலேசிய அரசாங்கம் ரஜினிக்கு பதவி வழங்க இருக்கிறது!

rajini
மலேசிய அரசாங்கம் ரஜினிக்கு சுற்றுலாத் துறை தூதர் பதவியை வழங்க இருப்பதாக தெரிகிறது.

கடந்த இருபது வருடங்களாக தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பல அரசியல் கட்சிகள் நடிகர் ரஜினியை கட்சிக்குள் வலைத்துப் போட முயற்சி செய்து வந்தன. அதற்கெல்லாம் ரஜினி படியவில்லை. அவர் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதரவு என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் மலேசிய அரசு ரஜினிக்கு சுற்றுலா துறை தூதர் பதவியை அளிக்க முன்வந்துள்ளதாம். இந்த பதவியில் தற்போது இருந்து வரும் ஷாருக்கான் இருந்து வருகிறார். மலேசியாவுக்கு சுற்றுலா பயணிகளை இழுக்க செய்த முயற்சியில் ஷாருக்கான் வெற்றி பெறவில்லை என்பதால் அவரை மாற்றும் முடிவில் இருக்கின்றதாம் அந்நாட்டு அரசு கடந்த ஆண்டு ரஜினி நடித்த ‘கபாலி’ திரைப்படம் மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தபோது அந்நாட்டு மக்கள் காட்டிய அன்பில் நெகிழ்ந்து போனார் ரஜினி.

எனவே மலேசிய அரசு இந்த பதவியை ரஜினிக்கு அளிக்க முன்வந்தால் அவர் மறுக்கமாட்டார் என்றே தெரிகிறது.

Leave a Response