சூர்யா-வின் அயன் இரண்டாம் பாகம் வெளியாகிறதா?…

Surya-180816
அயன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதா? என்பது குறித்து இயக்குநர் கே.வி.ஆனந்த் பதிலளித்துள்ளார்.நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் அயன் படத்தின் வெற்றி ஒரு முக்கிய மைல் கல்லாக இருந்தது. அதை தொடர்ந்து அவர் பல படங்களில் வெற்றிவாகை சூடினார்.

மேலும் அந்த படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டராகவும் திகழ்ந்தது. இந்நிலையில் அயன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் பதிலளித்துள்ளார்.

“அயன் படத்தின் வெற்றிக்கு பிறகு, அந்த படத்தின் ரீமேக்கிற்காக பல மொழிகளிலிருந்து அழைப்புகள் வந்தன. ஆனால் ரீமேக் எடுக்கும் வேலைகள் மிகவும் போர். அதில் புதிதாக எதுவுமே செய்ய முடியாது. என்னை பொருத்தவரை புதிது,புதிதாக ஏதாவது பரிசோதித்து பார்க்க வேண்டும். எனவே அந்த வாய்ப்புகளை எல்லாம் தவிர்த்துவிட்டேன். இப்போதைக்கு அயன் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை. இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேனோ அதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.”என்று கே.வி ஆனந்த் கூறினார் …

Leave a Response