செல்போன் திருடியதால் பொறியியல் மாணவர் கைதுசெய்யப்பட்டார்!

ha
தாம்பரம் அருகே ஒரு வீட்டில் புகுந்து ​பணம் மற்றும் செல்போனை கொள்ளையடித்த பொறியியல் மாணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வண்டலூர் அருகேயுள்ள கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் ஆர்.பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.2,700 ரொக்கம் மற்றும் 4 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஆடம்பரமாக கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க திருடியதாக மாணவன் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளார். வீட்டில் இருந்து திருடிவிட்டு தப்பிக்கும்போது அக்கம்பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாம்பரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து, பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Leave a Response