காதலியை திட்டமிட்டு தீக்கிரையாக்கிய காதலன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!..

fire-1
உல்காஸ்நகர் அருகே காதலர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், காதலியை தீக்கிரையாக்கிய காதலன் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உல்காஸ்நகர் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த பாரவ்தி மெஹெட்ரி(30), மற்றும் நரசிம்மா தலாரி(40), ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரதமடைந்த நரசிம்மா காதலியை கொளுத்தியுள்ளார். தீயின் சூடு தாங்காமல், பார்வதி தனது காதலன் நரசிம்மம் மீது பாய்ந்துள்ளார். இதில், பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நரசிம்மா 80% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடந்த இச்சம்பவத்தின் போது, இருவர் மட்டுமே கடையில் இருந்துள்ளனர். கடையில் இருந்து புகை வெளியேறியதால் பதட்டம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறை பார்வதியின் சடலத்தை மீட்டு, பாதி எரிந்த நிலையில் கிடந்த நரசிம்மாவையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பார்வதி மற்றும் நரசிம்மா ஆகியோர் காதலித்து வந்ததாகவும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரி சாகில் ஷேய்க் தெரிவித்துள்ளார். தற்போது இதனை விபத்தினால் ஏற்பட்ட மரணம் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Response