ஆர்.எஸ்.எஸ். தலையீடு கிடையாது உத்திர பிரதேச முதல்வர் தேர்வில்!..

vengaiya
உத்தர பிரதேச மாநிலத்தில், மாநில முதல்வர் தேர்வில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடவில்லை,” என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
உ.பி., முதல்வராக, இந்துத்துவா கொள்கையில் தீவிர பற்றுடைய, யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன.

இது குறித்து, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
உ.பி., மாநில, பா.ஜ.க, சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில், பா.ஜ.க, – எம்.எல்.ஏ.,க்கள் தான், யோகி ஆதித்யநாத்தை தேர்ந்தெடுத்தனர். கட்சியின் விதிமுறைப்படி, தங்கள் தலைவரை, எம்.எல்.ஏ.,க்கள் முறைப்படி தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த விஷயத்தில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிட்டது கிடையாது.
யோகி ஆதித்யநாத், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். துரதிருஷ்டவசமாக, சிலர், அவர் மீது, ஜாதிச் சாயம் பூசுகின்றனர். ஆதித்யநாத்திற்கு போதிய வாய்ப்புகள் தராமல், அவரை விமர்சிப்பது, நியாயமற்றது. எதிரிகளின் விமர்சனங்கள் பொய்யானவை என்பதை, யோகி ஆதித்யநாத் நிரூபிப்பார்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Response