காக்னிசன்ட் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்!!!..

cognizant-gtp
பெங்களூர்-வில் உள்ள ஐடி நிறுவனங்களில் பிரபலமானது காக்னிசன்ட் என்பது யாவரும் அறிந்ததே. இதில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.அதாவது அந்நிறுவனத்தின் 2.3% தொழிலார்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. தற்போது டிஜிட்டல் சேவைகளை நோக்கி வளர்ந்து வரும் ஐடி தொழிலில் பணியாற்றும் ஊழியர்களை திறன் அடிப்படையில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 2016ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் செலவின தொகை (Variable Pay) குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாத இறுதியில் நடக்கும் ஆண்டுக்கான ஊழியர்கள் தகுதி மதிப்பீட்டில், அவர்களின் குறைந்த திறன் அல்லது பொருத்தமில்லா திறன் போன்றவற்றை காரணம் காட்டி பணி நீக்கம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கீழ்மட்ட ஐடி சார்ந்த பணிகளில் ஆட்டோமேஷன் மூலம் தேவைக்கதிகமான பணிகள் முடிவடைவதால், ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க காக்வனிசன்ட் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த பணிநீக்கங்கள் 1-2% ஆகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 1% ஆகவும் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் 2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அமெரிக்க நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் 2.60 லட்ச ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 75 சதவீத ஊழியர்கள் இந்திய சந்தையில் இருக்கும் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.

நமது தொழிலாளர் மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கைகையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், வணிக இலக்குகளை அடையவும் வழக்கமாக ஊழியர்களுக்கு செயல்திறன் தகுதி நடத்தப்படும். அதன் முடிவில், குறைந்த சதவீதம் பெறும் ஊழியர்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்திய ஐடி சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகுத்து வந்த காக்னிசன்ட் நிறுவனம், கடந்த ஆண்டு வர்த்தக ரீதியாக கடுமையான வீழ்ச்சி கண்டது. ஆண்டின் மொத்த வளர்ச்சியே 8.6% என்ற நிலைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. காக்னிசன்ட் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படும் இத்திட்டம் அங்கு வேலை பார்பவர்களிடம் பெரும் பீதியை கிளப்பி உள்ளது…

Leave a Response