
‘என் வழி தனி வழி’ படத்தை தொடர்ந்து ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் ஆர்.கே.கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ‘மக்கள் பாசறை’ நிறுவனம் சார்பில் ஆர்.கே.தயாரித்துள்ள இந்த படத்தில் ஆர்.கே.யுடன் நீத்து சந்திரா, இனியா, நாசர், சுமன், ஆர்.கே. செல்வமணி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ளார். சஞ்சீவ் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.பிரபாகர் வசனங்களை எழுதியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படத்தை இம்மாதம் 24 ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
ரயிலில் நடக்கும் ஒரு கொலையை புலனாய்வு செய்ய வரும் ஒரு போலீஸ் அதிகாரி, அது சம்பந்தப்பட்டு நடக்கும் சம்பவங்கள் என்று பயணிக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பும் ரயிலில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘வைகை எக்ஸ்பிரஸ்’ அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக அமைந்துள்ளதாம்.



