ஆக்ஷன் கிங் அர்ஜூன் சசிகுமாருக்கு வில்லனாகிறார்!..

sasi-arjun
கிராமத்து மண்வாசனைக்கதையில் உருவாகும் கொடிவீரன் படம்.

சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிப்புலியைத் தொடர்ந்து கொம்பன், மருது ஆகிய படங்களை கொடுத்தவர் இயக்குனர் முத்தையா. தற்போது மீண்டும் சசிகுமாருடன் இணைந்து கொடிவீரன் படத்தை இயக்குகிறார். இப்படமும் கிராமத்து மண்வாசனைக்கதையில் உருவாகிறது. இதுவரை சசிகுமார் நடித்த படங்களின் பட்ஜெட்டை விட இப்படம் அதிக பட்ஜெட் கொண்ட மெகா படமாக உருவாகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்கிறார்.

கன்னட சினிமாவிலிருந்து தமிழுக்கு வந்து ஹீரோவாக நடித்து ஆக்ஷன் கிங்காக மாறியவர் அர்ஜூன். தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த நிலையில் கடல் படத்தின் மூலம் வில்லனாக மாறினார். தற்போது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனை வைத்து காதலின் பொன் வீதியில் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், சசிகுமாரின் கொடிவீரன் படத்தில் அவருக்கு வில்லனாக அதிரடி கிராமத்துக்காரராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கயிருக்கிறது.

Leave a Response