கடலில் பிளாஸ்டிக் குப்பை: அழியும் அபாயத்தில் அறிய வகை ஆமைகள்!..

aamai_3145145f
ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் கடற்கரையில் தொடர்ந்து ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ஆமைகள் எவ்வாறு இறந்து கரை ஒதுங்குகின்றன என்பது குறித்து கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

தற்போது பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை கள் கடல் பகுதியில் கொட்டப்படுகின்றன. ஆமைகள் எப்போதும் கழிவுகளை உண்டு வாழும் உயிரினம். அவை கடலின் ஓரம் நீரின் கீழ் பகுதியில் தரையில் உள்ள கழிவுகளைதான் அதிகம் உண்கின்றன. அப்போது அந்த கழிவுகளுடன் சேர்த்து பிளாஸ்டிக் பொருட்களையும் அவை உண் கின்றன. இதனால்தான் பாதிப்பு ஏற்பட்டு ஆமைகள் இறந்த நிலையில் அடிக்கடி கரையொதுங் குகின்றன.

மேலும் ஆமைகள் மீனைப் போன்று தண்ணீரை செவுல்கள் மூலம் சுவாசிப்பது இல்லை. ஆமைகள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேலே வந்து காற்றை உள்ளே இழுத் துக்கொண்டு மீண்டும் நீருக்கு அடியில் செல்லும் வழக்கத்தைக் கொண்டவை. சில நேரங்களில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் வலையை வீசும்போது இரண்டு மணி நேரம் கழித்துக் கூட வெளி யில் இழுப்பது உண்டு. அப்போது வலையில் சிக்கும் ஆமைகள் இறந்துவிடக் கூடும். அவற்றை அவர்கள் கடலில் தூக்கி வீசி விடுவார்கள். இதுபோன்ற சமயங் களிலும் இறந்த ஆமைகள் கரை ஒதுங்குகின்றன. ஒரு பகுதியில் ஒரு ஆமை கரை ஒதுங்கினால் அந்த இடத்தில்தான் இறந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. 50 கடல் மைல் தொலைவில் இறந்தாலும்கூட அவை கரை ஒதுங்கலாம் என்று தெரிவித்தனர்.

மாமல்லபுரம் பேரூராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை யினர் மாமல்லபுரம் கடல் பகுதி யில் குப்பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்து கின்றனர்

Leave a Response