கரப்ட் ஆன மெமரி கார்டின் பதிவுகளை மீட்பது எப்படி?

mamery
நாம் பயன்படுத்தும் மெமரி கார்டு கரப்ட் ஆகிவிட்டால், அதில் இருந்து எப்படி தகவல்களை மீட்பது என இங்கே பார்க்கலாம்.

நாம் அனைவருமே இன்டர்னெல் மெமரி எனப்படும் நமது கருவிகளின் உள்ளடக்க சேமிப்பு திறனை மட்டுமே கையாளுவதில்லை. தரவுகளின் எண்ணிக்கைகளுக்கும் அளவுகளுக்கும் ஏற்ற வண்ணம் நாம் நமது கருவிகளுக்கான மெமரி நீட்டிப்பு வசதி முறையான எஸ்டி அட்டைகளையும் பயன்படுத்திவருகிறோம். அப்படியான எஸ்டி கார்ட்டை நாம் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.

விலைக்குறைவான மற்றும் அங்கீகாரமில்லாத அட்டைகளை வாங்கினால் அவைகள் மிக விரைவில் கரப்ட் ஆகி நமக்கும் நம் முக்கியமான தரவுகளுக்கும் சிக்கலை விளைவிக்கலாம். அதுபோன்றதொரு மெமரி கார்ட் கரப்ட் சிக்கலில் நீங்கள் உள்ளீர்கள் என்றால் நீங்கள் என்னென்ன வழிமுறைகள் கொண்டு உங்கள் தரவுகளை மீட்கலாம் என பார்க்கலாம். முதலில் உங்கள் கார்டில் எவ்வளவு ஸ்டோர் செய்து வைக்க முடியும் என்பதை பாருங்கள். அதாவது அதன் ஸ்டோரேஜ் கேபாசிட்டி எப்படி உள்ளது என்பதை அறிய வேண்டும். உங்கள் எஸ்டி கார்டு சாதாரண வகை அல்லது உயர் கேபாசிட்டி அடங்கியதா என்று பார்க்க வேண்டும். மெமரி அல்லோகேஷன் என்பது ஒவ்வொரு கார்டுக்கும் மாறு பட்டிருக்கும்.

உங்கள் தரவுகள் எஸ்டிஎச்சி கார்டில் இருந்தால் உங்களுக்கு ரீட் செய்வதற்கு எஸ்டிஎச்சி டிவைஸ் தேவை. சில டிவைஸ்களில் மென்பொருள் டவுன்லோட்ஸ் இருக்கும். இவற்றை பயன்படுத்தி டிவைஸை அப்கிரேட் செய்து கார்ட்களை ரீட் செய்யலாம். ஆகையால் கார்டின் உற்பத்தியாளர்கள் அளிக்கும் வெப்சைட்டுக்கு சென்று அதை பற்றி படியுங்கள். டிரைவ் லெட்டர் கணினியில் பொருத்தப்படவில்லை என்றால் கணினி ரீட் செய்யாது. சிலவற்றில் ஒரு டிரைவ் லெட்டரை ரீடர் நியமித்திருக்கும். நீங்கள் அதன் மீது கிலிக் செய்தால் உங்களுக்கு இன்சர்ட் டிஸ்க் டூ ட்ரைவ் இ (insert disk into drive E) தகவல் கிடைக்கும். அப்படியென்றால் இதனால் கார்டை ரீட் பண்ண முடியவில்லை என்று அர்த்தம்.

உங்கள் ரீடர் சில கோப்புகளை மட்டும் படித்து மற்றவற்றை விட்டுவிட்டால் ஒரு சில கோப்புகள் மட்டும்தான் பாழாகி உள்ளது என்று அர்த்தம். அதற்கு ஃபைல் ரிக்கவரி ப்ரோகிராம்களை இணையத்தில் தேடி பிரச்சனையை முடியுங்கள். சில நேரத்தில் கார்டை ஸ்கேன் செய்வதால் பிரச்சனையை தீர்க்க முடியும். இது கரப்ட் ஆன கோப்பை சரி செய்ய வேண்டும் என்று இல்லை. மை கம்ப்யூட்டர் அல்லது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் ( My computer or windows explorer) கார்டை தேடி எடுத்து அதன் மீது ரைட் க்ளிக் செய்யவும். பாப் அப் மெனுவிலிருந்து ப்ராப்பர்டீஸ் மீது கிலிக் செய்யவும். இப்பொழுது டூல்ஸ் டேபை தேர்வு செய்து எரர் செக்கிங் பட்டன் (Error checking button) மீது கிளிக் செய்யவும். செக் பாக்ஸை கிளிக் செய்து கோப்பின் தவறுகளை சரி செய்யவும்.

கோப்பின் பெயர்களை டைரக்ட்ரி பட்டியளிடும். அதன் பின்பும் சரி செய்ய முடியவில்லையென்றால் டிரைவ் லெட்டர் மீது ரைட் கிலிக் செய்து ப்ராப்பர்டீஸை தேர்வு செய்யவும். எல்லா காலி இடத்தையும் இது காண்பித்தால் ஒன்று ஃபைல் டெலீட் ஆகியிருக்கலாம் அல்லது டைரக்ட்ரீ நீங்கி இருக்கலாம். இந்த சமயத்தில் ஃபைல் ரிக்கவரி அல்லது அன்டெலீட் ப்ரோகிராம் ஃபன்க்ஷன் உங்களுக்கு உதவும்.

உங்கள் கார்ட் ஓகே என்று ரீட் செய்தும் ஃபைலை சேமிக்க முடியவில்லை என்றால் உங்கள் கார்ட் ரைட் ப்ரொடக்டட் (write protected) ஆக இருக்கலாம். இதற்கு கார்டின் ஓரத்தில் உள்ள லாக் செல்லவும். இந்த சுவிட்ச் நழுவி இருந்தால் இதை லாக்டு ஆர் ரைட் ப்ரொடக்டட் (locked or write protected) என்று உறுதி படுத்தி கொள்ளுங்கள். சுவிட்ச் (Switch) மூடப்படாத நிலையில் இருக்கும் பொழுது இதை சேவ் செய்யவும்.

Leave a Response