இணையதளம் பயன்பாடு பற்றி பெண்களுக்கு அறிவுரை தரும் ஐஸ்வர்யா தனுஷ்

iyswarya
பெண்கள் இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.

சிலநாள்களுக்கு முன்பு ரஜினியின் மகள் ஐஸ்வர்யா மகளிர் தினத்தன்று ஐ.நா. சபையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பரதநாட்டிய நடனம் ஆடினார். பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை இந்திய தூதரம் ஏற்பாடு செய்து இருந்தது. ஐநா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை ஐஸ்வர்யா பெற்றார்.

இந்நிலையில் பரத நாட்டிய நிகழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய கருத்தரங்கு ஒன்றில் ஐஸ்வர்யா தனுஷ் பேசுகையில், ‘’மற்றவர்களின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம். பாதுகாப்பு இல்லாத விஷயங்களை இணையத்தில் பெண்கள் பகிரவேண்டாம்’’ என்று அறிவுரை கூறினார்.

Leave a Response