ஆர்யாவின் “கடம்பன்” படத்தின் வெளியிட்டு தேதி அறிவிப்பு!

kadamban
வருகிற ஏப்ரால் 14 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள கடம்பன் திரைப்படம் வெளியிடப்பட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வனம் சார்ந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘கடம்பன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த தகவலை நடிகர் ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘மஞ்சை பை’ இயக்குனர் ராகவன் இயக்கக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஆர்யாவுக்கு இந்த படம் கைக்கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழிற்சாலைகள் அமைக்க காடுகளை அழித்து, மலைவாழ் மக்களை வெளியேற்றும் சர்வாதிகாரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ இப்படத்தை தயாரித்துள்ளது. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை கேத்ரின் தெரசா நடித்துள்ளார்.

Leave a Response