ஒரே பள்ளியைச் சேர்ந்த ஆறு சிறுமிகளின் தற்கொலையின் மர்மம்!

suicide_800x600
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளியை சேர்ந்த 6 சிறுமிகள் 3 வார இடைவேளையில் அடுத்தடுத்த தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெல்வேறு வகுப்புகளில் படிக்கும் ஆறு மாணவிகள்,ஒருவர் பின் ஒருவராக தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்த ஆறு தற்கொலை சம்பவங்களும் கடந்த மூன்று வாரத்திற்குள் நடந்துள்ளன. தற்கொலை செய்து கொண்ட 6 மாணவிகளும் எந்தவித கடிதங்களையோ,குறிப்புகளையோ விட்டுச் செல்லவில்லை.”இந்த சிறுமிகள் வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும்,ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.இந்த தற்கொலைகளுக்கான குறிப்பிட்ட காரணம் என்ன என்பது குறித்து தற்போது வரை தெரியவில்லை.சமீபகாலமாக ஒரு தற்கொலை நடந்தால்,அதே பாணியில் நான்கு தற்கொலைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது.”என இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் குடும்பத்தினரை விசாரித்த போது,அவர்கள் ஆறு பேருக்கும் எந்த வித மன அழுத்தமும் இல்லை எனவும் அவர்கள் நடவடிக்கையில் எந்த வித மாற்றமும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

Leave a Response