நிசப்தம் – விமர்சனம்

C6Sfu_zXQAAaHFu

நிசப்தம்

கதை, இயக்கம் – மைக்கேல் அருண்
இசை – ஷான் ஜாஸீல்
நடிகர்கள்: அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர்.

பெண்கள் வானில் பறக்கும் இந்தக் காலத்தில்தான் பெண்களுக்கெதிரான குற்றங்களும், கொடுமைகளும் அதிகரித்து வருகிறது. நம் நாட்டில் மாநிலம் வாரியாக எந்த வேறுபாடில்லாமல் பெண் குழ்ந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் செய்திகள் பார்ப்பதே பயத்தை தருமளவு குற்றங்கள் குழந்தைகள் மீது நிகழ்த்தபடுகின்றன. அதற்கான தீர்வு, சட்டம் நம் நாட்டில் கேவலமாக இருக்கிறது. கற்றபழித்த கொடூரனுக்கு உதவித்தொகையுடன் தையல் மெஷின் கொடுத்தும் கொண்டிருக்கிறோம். முகத்தில் அறையும் இந்த நிஜத்தை பதிவு செய்திருக்கிறது “நிசப்தம்”.

ஒரு அழகான குடும்பம், ஒரு பெண் குழந்தை பள்ளி செல்லும் வழியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறது. அதில் சிதைந்து அழிந்து மீளும் குடும்பத்தின் கதை தான் “நிசப்தம்”. இந்த விஷயத்தில் போலீஸ், மீடியா சட்டம் என எவ்வளவு கோர வடிவில் இருக்கிறார்கள் நடைமுறை எவ்வளவு கேவ்லமாக இருக்கிறது என்பதை முகத்தில் அறைந்து சொல்கிறது படம்.

இப்போது வெகு அவசியமாக தேவைப்படும் விஷயத்தை எந்த சமரசமும் இல்லாமல் சொன்னதிற்கு படக்குழுவை பாராட்ட வேண்டும்.

படமாக இந்தப்படத்தின் மேக்கிங் சிறுசிறு குறைகள் கொண்டிருந்தாலும் நிஜத்தில் நடப்பதை திரைக்கு மாற்றிய விதத்தில் அப்ளாஸ் அள்ளுகிறது. ஒளிப்பதிவு கச்சிதம். குட்டிப் பெண் பல இடங்களில் மனதைக் குடைகிறார். கிஷோர், அபிநயா, அஜய் ஆக்டிங்கில் தங்கள் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். படத்தின் உண்ர்வுகளை கடத்தும் நாமும் குற்றவாளியாகி விடுகிறோம்.

நம் காலத்திற்கு மிகத் தேவையான பாடத்தை அழுத்தமாக சொல்லி பாராட்டு பெறுகிறது நிசப்தம். “நிசப்தம்” அனைவருக்குமான பாடம்.

Leave a Response