மனிதன் வாழ கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூமி

5_lineup_pia21422-png

நேற்று  உலகின்  விண்வெளி  ஆய்வு மையம்  நாசா ஒரு மகிழ்ச்சியான செய்தியை  வெளியிட்டுள்ளது.

பூமியிலிருந்து நாற்பது ஒளிவருடங்கள் தொலைவில் நமது சூரிய குடும்பம் போன்று மற்றும் ஒரு சூரிய குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த குடும்பத்தில் சிவப்பு   நிறத்துடன் ஒரு நட்சத்திரம் இருக்கிறது. அதற்கு Trappist 1 என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்த செந்நிற நட்சத்திரத்தில் உள்ள விசேசம், இதை ஏழு கோள்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அந்த ஏழு கோள்களுமே பூமியைப் போன்ற அமைப்புடன் காணப்படுவதுதான் ஆச்சரியம்.  அதில் மூன்று கோள்கள்  Habitable zone இல் இருக்கின்றன.  அதாவது பூமியைப்போலவே அட்மாஸ்பியரைக் கொண்டு,  உயிர்வாழ்வதற்குரிய  சகல வசதிகளுடன் காணப்படுகின்றன. ஒரு கோளில் சமுத்திரங்களும் இருப்பதாக சொல்கிறார்கள்.  ஒரு நட்சத்திரத்தில் இத்தனை கோள்கள் உயிரினம் வாழும் வகையில் காணப்படுவதாகக் கண்டுபிடித்தது இதுதான் முதல் தடவை.

  மனிதன் வாழ ஏற்ற கிரகம் ஒன்று நமது சூரிய குடும்பத்திற்கு  அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக  அறிவியலாளர்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வரும்காலத்தில்  பூமி  வாழத் தகுதியில்லாத இடமாக மாறும் போது நாம் பயணம் செய்யக்கூடிய இடமாக இவை காணப்படுகின்றன. அங்கு செல்வது எப்போதாவது சாத்தியப்படலாம். அடுத்தது, ஏலியன்கள் வாழலாம் என நம்பக்கூடிய இடமாகவும் இவை இருக்கலாம். நீர் இருக்கும் இடத்தில் உயிரினம் கட்டாயம் இருக்க வேண்டும்.

 

இனி அங்கே எப்படி பயணம் செய்வது என்ற ஆரய்ச்சயில்  இறங்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Leave a Response