என்னது, ராசி நாயா?

Juliyum Naalu Perum
தலைப்பை பார்த்தவுடன் என்னடா அப்பிடின்னு குழம்புறீங்களா? நீங்க மட்டும் இல்ல, நாங்களும் தான் முதலில் குழம்பினோம். சமீபத்தில் ‘ஜூலியும் நாலு பேரும்’ அப்படின்னு ஒரு படத்தோட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அப்படத்தின் சில காட்சிகளும், பாடல்களும் ஒளிபரப்பட்டது.

இப்படம் ‘காவியா சினிமாஸ்’ சார்பாக எஸ்.பிரேம்குமார் தயாரிக்க, சதீஷ்.ஆர்.வி. இயக்கியுள்ளார். இப்படத்தில் அமுதவாணன், இயக்குனர் சதீஷ், ஜார்ஜ் விஜய், யோகானந்த், ஆலியா மானசா, யோதிஷ் சிவன், பில்லி முரளி, மகாநதி ஷங்கர், மாறன், வெங்கட் ராவ், ஹோமாய், சாண்டி மாஸ்டர், ஜாகுவார் தங்கம் என ஒரு பட்டாலே நடித்துள்ளனர். நடிகர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்களே. நடிகர்களை போலவே தொழில்நுட்ப கலைஞர்களும் புதுமுகங்களே. படத்தின் இசையை ரகு சரவணகுமார் அமைக்க, பின்னணி இசையை ஸ்டேர்லின் நித்யா மற்றும் ரகு சரவணகுமார் இணைந்து இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பாஸ்கர் மேற்கொள்ள, வி.எ.மழை தாசன் படாதொகுப்பை செய்துள்ளார். இப்படத்தில் ‘ஜூலி’ என்று பெயரிடப்பட்ட ‘பிகில்’ என்ற வெளிநாட்டு வகை நாய் நடித்துள்ளது. இந்த நாயின் விலை சுமார் ரூ.50,000 முதல் ரூ.80,000 வரை மதிப்புள்ளது. இயக்குனர் தன்னுடைய வீட்டில் வளர்க்கும் அந்த நாயையே தன்னுடைய படத்தில் நடிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை பற்றி இயக்குனர் சதீஷ் கூறியதாவது, “கதையின் முக்கிய சாராம்சம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தல்களை பற்றி அலசுகிறது. அமெரிக்காவில் கடத்தப்படும் இடது காதில் மூன்று அதிர்ஷ்ட மச்சங்களை கொண்ட “ஜூலி” என்கிற அதிர்ஷ்ட நாய், நாய் கடத்தல் கும்பலின் தலைவனான வில்லன் மூலமாக இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டு, சென்னையில் ஒரு பெரிய தொழிலதிபருக்கு விற்கப்படுகிறது. மறுபுறம், தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் 3 இளைஞர்களும் சென்னையில் வசித்து வரும் ரஜினியின் தீவிர ரசிகராக ஆட்டோ ஓட்டும் மாணிக்கம் எனும் இளைஞரும், நண்பர்களாகின்றனர். வேலை தேடிவந்த மூவரும் சென்னையில் ஒரு கன்சல்டன்சியிடம் பணத்தை பறிகொடுக்கின்றனர்.

விட்ட பணத்தை குறுக்கு வழியிலாவது சென்னையிலேயே சம்பாதிக்க எண்ணி, “ஜூலி நாயை” வாங்கிய தொழிலதிபரின் மகளிடமிருந்து அதை கடத்துகின்றனர். கோடிக்கணக்கில் மதிப்புள்ள கடத்தப்பட்ட நாயை தேடி ஒருபுறம் தொழிலதிபர் இவர்களை துரத்த, நாயை வேறு ஒரு நாட்டு நபருக்கு விற்பதற்காக, நாயை தேடி வில்லனும் அவனது ஆட்களும் நால்வரையும் துரத்த, அதே சமயத்தில் ஜூலி என்ற பெண் ஒருவர் காணாமல் போக, குழப்பத்தில் போலீஸும் இவர்களை துரத்த, நால்வரும் செய்யும் கலாட்டாக்களை நகைச்சுவையாக எடுத்துச்செல்கிறது, இப்படம்.

அதிர்ஷ்ட நாய் ஜூலி யாரிடம் சேர்கிறது என்பதும், எல்லோரிடமிருந்தும் எப்படி நால்வரும் தப்பிக்கிறார்கள்?, விட்ட பணத்தை அடைந்தார்களா? இல்லையா? என்பதையும் பரபரப்புடன் அமைந்த படத்தின் இறுதிக்கட்டங்கள் எடுத்துச்செல்கிறது. மொத்ததில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் படமாக “ஜூலியும் நாலு பேரும்” இருக்கும் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார் இயக்குனர் சதீஷ்.

இந்த இயக்குனர் சொன்ன கதையை கேட்டு கூகுல் செய்து பர்ர்த்து தான் நாங்களும் தெரிஞ்சிக்குனோம் அந்தமாதிரி ராசி நாய்கள் இருக்குதுன்னு. அதே மாதிரி வெளிநாடுகளில் நாய்கள் கடத்தபடுவது உண்மைத்தான்.

Leave a Response