சுசீந்திரன் இயக்கும் அடுத்த படம்…..

Suseenthiran+Antony
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அறம் செய்து பழகு”. இப்படத்தில் கதையின் நாயகர்காளாக விக்ராந்த், சந்திப் கிசன் ஆகியோர் நடித்து வருகின்றன்றனர். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “நான் மகான் அல்ல” திரைபடத்தில் பணியாற்றிய போது, இயக்குனர் சுசிந்தரன் உடன் தயாரிப்பாளர் ஆண்டனிக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இயக்குனர் சுசீந்திரன் விரும்பியதால் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றிய ஆண்டனி இப்போது “அறம் செய்து பழகு” திரைபடத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகயுள்ளார்.

இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் ஆண்டனியிடம் கேட்டப்போது, இப்படம் எனக்கு மிகப்பெரும் வாய்ப்பு, இதற்காக சுசீந்திரனுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். சுசீந்திரனுக்கு “அறம் செய்து பழகு” திரைப்படம் “நான் மகான் அல்ல”, “பாண்டிய நாடு” போன்ற மிகப்பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று மிகவும் பெருமையுடன் தயாரிப்பாளர் ஆண்டனி கூறினார்.

Leave a Response