பிழைகள் மூலமாக தான் புதிய சிந்தனைகள் பிறக்கின்றது: இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

thumbnail_REEL_04_STILLS-158ஒரு திரைப்படத்தை பார்த்து பார்த்து, எந்த வித பிழையும்  இல்லாமல் உருவாக்கும் பல இயக்குநர்கள் மத்தியில், பிழைகளை கொண்டே ஒரு திரைப்படத்தை உருவாக்கும் உன்னதமான படைப்பாளி, இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவருடைய இயக்கத்தில், சாந்தனு பாக்கியராஜ் மற்றும் பார்வதி நாயர் நடிப்பில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாகும்  ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் அதனை உறுதிப்படுத்தும்

இது குறித்து இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூறுகையில்,

“புதுமையான சிந்தனைகள், புது புது எண்ணங்கள், கறபனைகள் என இவை யாவும் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக திகழ்வது, நாம் செய்யும் சிறு சிறு பிழைகள் தான்.  என்னுடைய கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படமும் ரசிக்கக்கூடிய பிழைகளை கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய காலக்கட்டத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் உலக சினிமா. அந்த வகையில் எங்களின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் அவர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு செதுக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லுவேன். கதை மட்டுமில்லாமல்,  வர்த்தக வெற்றிக்கு தேவையான எல்லா சிறப்பம்சங்களையும் இந்த படத்தில் உள்ளடக்கி இருக்கிறேன். என்னை பொறுத்த வரை, சாந்தனு இந்த கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம்  மூலம் வர்த்தக நாயகனாக உருவெடுத்திருக்கிறார் என்றெ சொல்லுவேன். இசையமைப்பாளர் சத்யாவின் மனதை மயக்கும் இசை மற்றும் பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த படக்குழுவின் பங்களிப்பும் இந்த  படத்திற்கு பக்கபலமமாய் அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தை நான் தனி ஒருவனாக தயாரிக்காமல், சிலரோடு கைக்கோர்த்து கூட்டு முயற்சியாக தயாரித்து இருக்கிறேன். எங்களின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தை திரையிடுவதற்கு நாங்கள் மேற்கொண்ட சவால்களை வைத்து ஒரு படமே எடுக்கலாம். நாளை வெளியாக இருக்கும் எங்களின் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருகி வரும் வரவேற்பை பார்க்கும் பொழுது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதுமட்டுமின்றி, பத்திரிக்கை, ஊடகம் மற்றும் இணையத்தள நண்பர்களின் பாராட்டுக்கள் எனக்கு மேலும் உற்சாகத்தை வழங்கி இருக்கின்றது” என்று கூறியுள்ளார்.

Leave a Response