கோலிசோடா புகழ் கிஷோரின் நடிப்பில் பயந்தாங்கோழி

thumbnail_kishore-1‘கோலிசோடா’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய லெலின் இயக்கும் படம் ‘பயந்தாங்கோழி’. இப்படத்தின் நாயகனாக ‘பசங்க’, ‘கோலிசோடா’ ஆகிய படங்களில் நடித்த கிஷோர் நடிக்கிறார். மேலும் இவருடன் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு பாபு நாத் இசையமைக்கிறார். எஸ்.கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஒளிப்பதிவாளர் நட்டியுடன் இந்தியில் பணியாற்றியவர்.

இப்படத்தை ஸ்ரீ தேவர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பி.எஸ்.டி நிறுவனம், மைல்ஸ்டோன் நிறுவனம், எம்.பிக்சர்ஸ் நிறுவனம்   என்ற மூன்று நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை வெளியிடவுள்ளது. இப்படத்தின் படபிடிப்பு ஜனவரி 14ம் தேதி முதல் துவங்குகிறது.

Leave a Response