வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

vetrimaranஇசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ‘புரூஸ்லீ’ படத்தைத் தொடர்ந்து ‘அடங்காதே’,’4G’,’சர்வர் தாளமயம்’, ஈட்டி இயக்குனர் ரவி அரசு இயக்கும் படம், சசி இயக்கும் படம் என ஐந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கிவந்த ‘வடசென்னை’ படத்தின் படபிடிப்பு தொடர்ந்து தள்ளிப்போனதால், படப்பிடிப்பு நிறுத்திவைக்கப் பட்டுள்ளது. நடிகர் தனுஷ் இயக்கும் ‘பவர்பாண்டி’ படத்திலும், நடித்துவரும் ‘வேலையில்லா பட்டதாரி-2’ படத்திலும் பிசியாக இருப்பதால் வடசென்னை படத்தின் படபிடிப்பு தள்ளிப்போனதாக தெரிகிறது. மேலும் இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் இப்படத்தை ஸ்ரீ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மதாம் தொடங்கும் என எதிபார்க்கப் படுகிறது.

Leave a Response