தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

pic-1தர்மதுரை படம் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினர் அப்படத்தின் 100வது நாள் கேடயத்தை ரஜினிகாந்த்திடம் வழங்கி வாழ்த்து பெற்றுக்கொண்டனர்.

விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.

சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் முக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.

வில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்தினை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

உண்மையான தர்மதுரைக்கு தங்கள் தர்மதுரையின் 100ம் நாள் கேடயத்தை வங்கியதில் மகிழ்ச்சி அடைந்தனர் படக்குழுவினர்.

Leave a Response