லாபம்
இயக்கம் – ஜனநாதன்
நடிப்பு – விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன்
கதை : ஒரு கிராமத்தை விட்டு சென்ற நாயகன் நீண்ட காலம் கழித்து மீண்டும் கிராமத்திற்கு வருகிறான். அந்த கிராமத்தை ஆக்கிரமித்து அதை வைத்து சம்பாதிக்கும் பெரிய மனிதர்களை எதிர்த்து, கிராமத்தில் விவசாயம் செய்து மக்கள் செழிக்க போராடுகிறான். அவனுக்கு வரும் தடங்கல்களை விவாசய சங்கம் மூலம் முறியடித்து எப்படி ஜெயிக்கிறான் என்பதே கதை
ஜனநாதன் கம்யூனிச சித்தாந்தங்களின் மீது அதிகம் பற்று கொண்ட இயக்குநர். ஒரு படத்தில் கதை சொல்வதைவிட மக்கள் அரசியல் பேசுவதே அவருக்கு முக்கியம். அவரது படங்கள் பெரும்பாலும், அது பேசும் அரசியலுக்காக கொண்டாடப்பட்டவையே. அவரது படங்களில் ஆதார கதையில் இருந்து பிரியும் கிளைக்கதைகள் கூட முழுக்க முழுக்க மக்கள் அரசியல் பேசும். இந்தப்படத்தில் மக்களை பிழிந்து சம்பாதிக்கும் முதலாளித்துவத்தின் லாபத்தை போட்டு உடைத்திருக்கிறார். இறக்கும் வரையிலும் மக்கள் அரசியல் பேசி ஒரு கலைஞனின் கடமையை செய்துவிட்டு சென்றிருக்கிறார்.
விஜய் சேதுபதி விவசாயி சங்க தலைவனாக வருகிறார். அவர் மக்களுக்கு கூறும் ஒவ்வொரு தகவலும் சமூகத்துக்கான மருந்து.
உள்ளூரில் விளையும் பருத்திக்கும் உலக பொருளாதாரத்துக்கும் உள்ள அரசியல் பற்றி சொல்வது அபாரம். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் உழைப்பிலும் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பதை தெளிவாக எளிய மக்களுக்கும் புரியும் வண்ணமாக பாடம் எடுத்த்ருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு பாடத்திலும் ஜ்னநாதன் மிளிர்கிறார்.
விஜய் சேதுபதி மக்களுக்கு பிடித்த ஆளுமையாக வந்து செல்கிறார். அவர் அறிவுறை கூறும்போது கொஞ்சம் சமுத்திரகனி சாயல் தெரிகிறது. ஸ்ருதி ஹாசன் மாடலாக வருகிறார். ஒரு பாடலுக்கு பிறகு படத்தில் அவரை காணவில்லை. இன்னும் சில காட்சிகள் வந்து சென்றிருக்கலாம்.
வில்லன்கள 80 கால மசாலா வில்லன் போலவே நடந்து கொள்கிறார்கள்.
ஒளிப்பதிவு படத்திற்கு தேவையானதை சரியாக படம்பிடித்துள்ளது. இசை பின்னணியில் அசத்தினாலும் பாடல்கள் பெரிதாக கவரவில்லை.
இயக்குநர் ஜனநாதன் இறப்பால் பாதியில் நின்ற படத்தை முடித்து வெளியிட்டிருக்கிறார்கள். அதனால் திரைக்கதையில் ஆங்காங்கே தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது. ஆனாலும் சுவாரஸ்ய தகவல்களால் திரைக்கதை ஈர்க்கிறது. விஜய் சேதுபதியை போலீஸ் தேடுவதும், அவர் தப்பிக்கும் காட்சிகளும் பரபரப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. க்ளைமாக்ஸில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் அவலத்தை படமாக்கியிருப்பது தைரியமானது. திரைக்கதையில் தடுமாறினாலும் மக்களுக்காண அவசியமான சினிமாவாக மிளிர்கிறது லாபம்.
லாபம் இந்த மக்களுக்கு ஒரு கலைஞனின் சமர்ப்பணம்.
மதிப்பீடு: 3/5