தங்கல் படத்தின் வசூல் 100 கோடியை தாண்டியுள்ளது

dangal-story_647_070416015249அமீர் கான் நடிப்பில் உருவான படம் ‘தங்கல்’. இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இப்படம் இந்தியாவில் 4000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இப்படம் மூன்று நாட்களில் 100 கோடி வசூலித்துள்ளது.

வெளியான முதல் நாளில் 29 கோடி வசூல் செய்த இப்படம் முதல் நாள் ஓப்பனிங்கில் இந்த ஆண்டு அதிக வசூலை செய்த படத்தில் இரண்டாவதாக இருக்கிறது. சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த ‘சுல்தான்’ முதல் நாளில் 35 கோடி வசூல் செய்தது.

தங்கல் படம் இரண்டாவது நாளில் 35 கோடியும், மூன்றாவது நாளில் 42 கோடியும் வசூலித்துள்ள இப்படம் மற்ற மொழிகளின் வசூலையும் சேர்த்து 100 கோடியை தாண்டியுள்ளது.

Leave a Response