சுராஜின் சர்ச்சைக்குரிய கருத்து: கோபத்தில் நடிகைகள்

surajவிஷால், தமன்னா நடிப்பில் உருவான கத்திச் சண்டை படத்தை இயக்கியவர் சுராஜ். சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய இவர்,

“நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. அதனால் அவர்கள் கிளாமராகத் தான் நடிக்க வேண்டும். காஸ்ட்யூம் டிசைனர், முட்டிக்கு கீழ் உடையை வடிவமைத்தால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். கமர்சியல் படத்தில் ஹீரோயின்கள் கவர்ச்சியான உடையை அணிந்து தான் நடிக்க வேண்டும். அவர்கள் நடிப்புத் திறமைகளை எல்லாம் சீரியல்களில் காட்டிக்கொள்ளட்டும்.” என்று கூறியுள்ளார்.

இதை பற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ள தமன்னா, “நான் நடித்த கத்தி சண்டை பட இயக்குனர் சுராஜ் கூறிய கருத்துகளால் நான் வேதனையும், கோபமும் அடைந்துள்ளேன். அவர் என்னிடமும், சினிமாவில் இருக்கும் அனைத்து பெண்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதைபோன்று பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Response