டிசம்பர் 30ம் தேதி வெளியாகும் விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’

c0k735-veaakzd_இந்தியாவில் கல்வி தரத்தின் அவலத்தை சொல்லும் கதையாக உருவாகிறது ‘அச்சமின்றி’. இப்படத்தை ராஜபாண்டி இயக்குகிறார். விஜய் வசந்த், சிருஷ்டி டாங்கே, ராதாரவி, சரண்யா பொண்வண்ணன், சமுத்திரக்கனி, கருணாஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை வி.வினோத்குமார் தயாரித்துள்ளார். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்திற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில், அமைச்சரின் மனைவியாக சரண்யா நடித்துள்ளார். படங்களில், காமெடி, சென்டிமென்ட் கலந்த, அம்மா கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த சரண்யா, இப்படத்தில், வில்லி வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி வெளியாகிறது.

Leave a Response