சலீம், தர்மதுரை ஆகிய படங்களை தயாரித்தவர் ‘ஸ்டுடியோ 9’ ஆர்.கே.சுரேஷ். சசிகுமார் நடிப்பில் பாலா இயக்கி வெளிவந்த தாரை தப்பட்டை படத்தில் வில்லனாக நடித்தார். பின்னர் மருது, தர்மதுரை ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது மீண்டும் பாலாவின் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தாரை தப்பட்டை படத்தில் சாதரன வில்லனாக நடித்த இவர் இப்படத்தில் வித்யாசமான கேரக்டரில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.