டிசம்பர் 29ம் தேதி வெளியாகும் துருவங்கள் பதினாறு


dhuruvangalpathinaaru-1-600-22-1482387578நடிகர் ரகுமான் நடிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் துருவங்கள் பதினாறு. பல வருடங்களுக்குப் பின் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் ரகுமான். இப்படத்தில் அஸ்வின், பிரகாஷ், டெல்லி கணேஷ், யாஷிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜேம்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஹாலிவுட் பாணியில் திகில் படமாக உருவாகி இருக்கிறது.

இப்படம் டிசம்பர் 30ம் தேதி வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர். தற்போது ஒரு நாள் முன்பே டிசம்பர் 29ம் தேதியே வெளியிடவுள்ளார்கள். நைட் நாஸ்டால்ஜியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,

“காவல்த்துறை அதிகாரியான இருக்கும் ரகுமான் ஒரு விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்துவிடுகிறார். விருப்ப ஓய்வில் இருக்கும் அவர் பழைய வழக்கை எடுத்து தனிநபராக கையாள்கிறார். அப்போது எதிர்பாராத விஷயங்கள் அந்த வழக்கில் நடந்திருப்பது தெரிகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.” என கூறியுள்ளார்.


 

Leave a Response