குரங்கு பொம்மை படத்தின் அனிமேட்டட் போஸ்டரை வெளியிடும் விஜய் சேதுபதி


unnamed-1நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விதார்த் நடித்திருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, கஞ்சா கருப்பு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரித்துள்ள இப்படத்தின் அனிமேட்டட் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நாளை மாலை 6 மணிக்கு தனது பேஸ்புக்கில் வெளியிடுகிறார்.

இதேபோல் விதார்த் நடித்திருந்த குற்றமே தண்டனை படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதிதான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Leave a Response