நடிகை சாவித்திரியாக சமந்தா நடிக்கவில்லை


want-next-film-to-be-more-special-than-theri-24-samanthaமுன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மாகாநதி என்ற பெயரில் தெலுங்கில் படமாக உருவாக இருக்கிறது. இப்படத்தில் சாவித்திரியின் வேடத்தில் சமந்தா நடிப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் சாவித்திரி வேடத்தில் சமந்தா நடிக்கவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் சவித்திரி வேடத்தில் நடிக்க நித்யா மேனன் மற்றும் வித்யா பாலன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகும் எனவும், படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.


 

Leave a Response