புதிய கீதை படத்தின் இயக்குனருடன் இணையும் ‘கயல் ஆனந்தி’


maxresdefault-3விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’ படத்தை இயக்கியவர் K.P.ஜெகன். இதையடுத்து ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் மாயண்டி குடும்பத்தார் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து மிளகா, கோரிப்பாளயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கவுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார். காமெடி கதாப்பாத்திரத்தில் யோகிபாபூ நடிக்கிறார்.

இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.


 

Leave a Response