போலீஸ் வேடத்தில் மீண்டும் கார்த்தி

karthi-blockbuster-filmsஇயக்குனர் சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்டோர் நடித்த படம் “சிறுத்தை”. இப்படத்தில் கார்த்தி கம்பீரமான போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

தற்போது மீண்டும் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி. சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் இயக்கும் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் கார்த்தி. இப்படத்திற்கு “தீரன் அதிகாரம் ஒன்று” என்று பெயரிடப்பட்டுள்ளனர். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் தொடங்க இருக்கிறது.

Leave a Response