பைரவா படத்தின் பாடல்கள் முன்பே எப்படி வெளியானது?

hqdefault‘தெறி’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘பைரவா’. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய இயக்குனர் பரதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் விழாக்கள் எதுவுமின்றி நேரடியாக கடைகளிலும் இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவு கராணமாகவும் வர்தா புயலின் பாதிப்புகளின் கராணமாகவும் பாடல்களை விழா வைத்து வெளியிட விஜய் மறுத்துவிட்டார்.

இப்படத்தின் இசை உரிமையைக் லகரி மியூசிக் நிறுவனம் பெற்றிருந்தது. டிசம்பர் 23ம் தேதி வெளியாக இருந்த இப்படத்தின் பாடல்கள் முன்னரே வெளியாகிவிட்டது.

இதுகுறித்து லகரி மியூசிக் நிறுவனம், “மிகவும் வருந்துகிறோம். தகவல் தொடர்பு கோளாறால் ஐ-டியூன்ஸ் இணையத்தில் ‘பைரவா’ பாடல்கள் வெளியாகிவிட்டது. ஆனால், உடனடியாக தெரியப்படுத்தி மாற்றினோம்.

ஐ-டியூன்ஸ் அலுவலகம் சில வாரங்கள் இயங்காததால் முந்தைய இசை வெளியீட்டு தேதிக்கு வெளியிட்டு விட்டார்கள். நாங்கள் அனுப்பிய புதிய தேதி அடங்கிய இ-மெயிலை அவர்கள் பார்க்கவில்லை. விரைவில் அப்பாடல்களை இணையத்தில் வெளியிடுவோம்” என்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.


 

Leave a Response