பைரவா திரை விமர்சனம்

1477568509_bairavaa-upcoming-tamil-action-thriller-movie-written-directed-produced-by-bharathan-filmசென்னையில் உள்ள தனியார் வங்கியில் வராத கடன்களை வசூலிக்கும் வேலையை செய்துவருகிறார் விஜய். இவருடன் சதீஷும் வேலை செய்து வருகிறார். தன் தோழியின் கல்யாணத்திற்க்காக திருநெல்வேலியில் இருந்து சென்னை வருகிறார் கீர்த்தி சுரேஷ். அவரை பார்த்ததும் காதல் வயப்படுகிறார் விஜய்.

கல்யாணம் முடிந்து திருநெல்வேலிக்கு செல்லும் கீர்த்தி சுரேஷிடம் பஸ்நிலையத்தில் வைத்து காதலை சொல்ல போகிறார் விஜய். அங்கு கீர்த்தி சுரேஷை கொல்ல ஒரு கும்பல் வருகிறது. அப்போது போனில் ஒரு அழைப்பு வருகிறது, பின்னர் கீர்த்தி சுரேஷை ஒன்றும் செய்யாமல் ரவுடி கும்பல் அங்கிருந்து கிளம்புகிறது.

இதையெல்லாம் பார்த்த விஜய், கீர்த்தி சுரேஷிடம் அவர்கள் யார் என விசாரிக்கிறார். அப்பொழுது கீர்த்தி சுரேஷ், தான் ஜெகபதிபாபு இயக்கிவரும் மருத்துவ கல்லூரியில் படித்துவருவதாகவும், தன்னுடைய தோழி அபர்ணா வினோத்தை ஜெகபதி பாபு ஆட்களை வைத்து கொலை செய்துவிட்டதாகவும், இது குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளதாகவும் அதன் காராணமாக எனக்கு கொலைமிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறுகிறார்.

இதையெல்லாம் கேட்ட விஜய், ஜெகபதிபாபுவிற்கு முடிவு கட்ட திருநெல்வேலிக்கு புறப்படுகிறார். இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முடிவுக்கு வந்ததா?, கீர்த்தி சுரேஷுடன் இணைந்தாரா?, என்பதே இப்படத்தின் மீதி கதை.

இளம் தோற்றத்தில் வரும் விஜய்யின் ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைகாட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார்.

கீர்த்தி சுரேஷின் நடிப்புத் திறமையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார். நடத்திலும் பின்னியுள்ளார்.

இயக்குனர் பரதன், தனியார் நிறுவனங்கள் கல்வி என்ற பெயரில் நடத்தும் அக்கப்போர்களை விஜய்யை வைத்து சிறப்பாக கூறியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்கள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக ‘வர்லாம் வர்லாம் வா’ பாடல் வரும்பொழுது ரசிகர்களின் கூச்சலில் காது கிழிகிறது. பின்னணி இசை வெளுத்து வங்கியுள்ளது. சுகுமாரின் ஒளிப்பதிவு அருமை.

மொத்தத்தில் ‘பைரவா’ ரசிகர்களுக்கு சிறப்பான பொங்கல் விருந்து.

Leave a Response