உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகும் ‘பைரவா’

online_06பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12ம் தேதி வெளியாகும் இப்படம் உலகம் முழுவதும் 55 நாடுகளில் வெளியாகிறது. இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமத்தை ஏ அண்ட் பி குரூப் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இப்படத்தை நைஜீரியா, உகாண்டா, கென்யா, உக்ரைன், மெக்சிகோ, போலாந்து உட்பட பல நாடுகளில் முதல் முறையாக வெளியிடுகிறது.

“55 நாடுகளில் படத்தை வெளியிடுவது சினிமா வர்த்தகத்தில் ஒரு சரித்திர சாதனையாகும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Response