சந்தானம் படத்திற்கு இசையமைக்கும் சிம்பு


1439358720_simbu-santhanamநடிகர் சந்தானம் சிம்பு நடித்த ‘மன்மதன்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பிறகு பல படங்களில் நடித்து முண்னனியில் உள்ளார்.

தற்போது ஹீரோவாக மட்டுமே நடிக்கும் சந்தானம், தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படத்தில் மட்டும் காமெடியனாக நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய சிம்புவை தன்னுடைய படத்திற்கு இசையமைக்க வைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கும் படம் ‘சக்கை போடு போடு ராஜா’. இப்படத்தில் சந்தானத்துடன் நடிகர் விவேக் மற்றும் விடிவி கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். வைபவி சாந்தலியா சந்தானத்திற்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்திற்குத் தான் நடிகர் சிம்பு இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


 

Leave a Response