குஜராதில் பைனான்சியர் வீட்டில் ரூ.10.50 கோடி பறிமுதல்


india_rbi_2000_rupees_2016-00-00_bnl_pnlபிரதமரின் கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், குஜராத் மாநிலம், சூரத் நகரில் உள்ள ஒரு டீக்கடைக்காரர் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 10.50 கோடி ரூபாய் கைப்பற்றியுள்ளனர்.

முன்னர், ஒரு டீக்கடையில் வேலை செய்து, பின்னர் டீக்கடைக்காரராக மாறி, தற்போது பைனான்சியராக உருவாகி இருக்கும் இவரது வீட்டில் இருந்து சுமார் 1.05 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் உள்பட 1.45 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 4.92 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 1.39 கோடி மதிப்பிலான இதர நகைகள், 1.28 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளிப் பொருட்கள், 1.49 கோடி மதிப்பிலான பங்குப் பத்திரங்கள் உள்பட சுமார் 10.50 கோடி மதிப்பிலான சொத்துகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவருக்கு சொந்தமான 17 வங்கி லாக்கர்களில் 13 லாக்கர்களை மட்டும் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். மேலும் 4 லாக்கர்களை சோதனையிட அனுமதிக்காக காத்திருக்கின்றனர். அந்த லாக்கர்களில் இன்னும் ஏராளமான சொத்துகள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

Leave a Response