ஆக்ஷ்ன் ஹீரோயினாக ரித்திகா சிங்


ritika-singh-stills-8இறுதிச்சுற்று படத்தில் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுது. ரித்திகா சிங் இப்படத்தில் நடித்து தேசிய விருதும் வாங்கினார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தார்.

தற்போது பி.வாசு இயக்கும் சிவலிங்கா படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்துள்ளார். இப்படம் குரு என்ற பெயரில் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் நடித்துவரும் போதே ஆக்‌ஷன் படம் ஒன்றை ஓகே சொல்லியிருக்கிறார் ரித்திகா சிங்.

தற்போது வெளியாகவுள்ள குரு படம் வெளியானது அந்த படம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


 

Leave a Response