குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.1000 நோட்டுகள்


rbi1000rs-750x500திருச்சி உறையூரில், குப்பை தொட்டியில் பழைய, 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக கண்டு எடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகளை நவ.8 ம் தேதி வாபஸ் பெற்றது. அதன் பிறகு, பணத்தை டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்தது. பழைய,500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மட்டுமே டிபொசிட் செய்ய முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டுமானால், அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கு வருமான வரித்துறைக்கு கணக்கு சொல்ல வேண்டும்.

இதனால், கறுப்பு பணத்தை வைத்து இருப்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில், திருச்சி உறையூர் பகுதியில் ஒரு குப்பை தொட்டியில், இன்று காலை பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் துண்டு துண்டாக வீசப்பட்டு இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு இருந்த கரன்சி நோட்டுகளின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என, அதிகாரபூர்வ மற்ற தகவலும் வேகமாக பரவியது. இதன் காரணமாக, குப்பை தொட்டியை காண ஏராளமான மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


 

Leave a Response