விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் ராதிகா


vijay-antony-images-18இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ‘நான்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். தன்னுடைய தயாரிப்பில் மட்டுமே நடித்து நடித்து வந்த விஜய் ஆண்டனி, தற்போது நடிகை ராதிகா தயாரிக்கிகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இது பற்றி விஜய் ஆண்டனி கூறுகையில்,

”ராதிகா மேடம் தான் 15 வருடங்களுக்கு முன்பு என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இப்போது அவர் தயாரிக்கும் படத்தில்  நடிப்பது எனக்குப் பெருமை. அடுத்தவருடம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” என்று கூறியுள்ளார்.

ராதிகா தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது.


 

Leave a Response