திரையரங்கில் தேசியகீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவை இல்லை


supremecourt-keeb-621x414livemintநாடு முழுவதும் திரையரங்கு களில் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்வ ராய் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாதிட்டபோது, ‘‘திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது மாற்றுத் திறனாளிகளால் எவ்வாறு எழுந்து நின்று மரியாதை செலுத்த முடியும்’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நீதிபதிகள், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை. அதற்கு ஈடான வகையில் அவர்கள் உரிய மரியாதை செலுத்தினால் போதும் என்றனர்.

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க உத்தரவிட்டது போல் நீதிமன்றங்களிலும் தேசிய கீதத்தை இசைக்க உத்தரவிடவேண்டும் என்று கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டெல்லி தியேட்டரில் நடந்த விபத்தை டெல்லி மாநகராட்சி குறிப்பிட்டு இருந்தது. அதன்படி தியேட்டரில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது கதவுகள் பூட்டப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் திருத்தம் செய்தனர். இந்த வழக்கு விசாரணை பிப்ரவரி 14-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


 

Leave a Response