ஆகிசிஸ் வங்கியில் 100 கோடி முறைகேடு


axis-bank-759கருப்புப் பணத்தை ஒழிப்பதற்க்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது.

வங்கிகளில் மாற்ற இம்மாதம் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கருப்புப் பணத்தை குவித்து வைத்திருக்கும் பலர் அந்தப் பணத்தை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்தினால் மாட்டிக் கொள்வோம் என்று அஞ்சுகின்றனர்.

இவர்களில் சிலர் வேறு நபர்களின் பெயர்களில் போலியாக கணக்குகளை ஆரம்பித்து அந்த கணக்குகளில் தங்களது கள்ளப்பணத்தை முதலீடு செய்து, கருப்பை வெள்ளையாக்கி கொள்ள முயற்சித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வருமான வரித் துறையினர் டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் வங்கிக் கிளையில் திடீர் சோதனை மேற் கொண்டனர். அப்போது, போலியான வாடிக்கையாளர்கள் பெயரில் (கேஒய்சி) விவரங்கள் கொடுத்து பல வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் சட்ட விரோ தமாக வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. 44 போலி கணக்குகளில், 100 கோடி ரூபாய், ‘டிபாசிட்’ செய்யப்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதையடுத்து வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தவறு செய்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.


 

Leave a Response