பள்ளி மாணவி பலாத்கார வழக்கு, இறக்கும் வரை ஆயுள் தண்டனை : மகிளா விரைவு நீதிமன்றம்


karurrapeகரூரில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியை சேர்ந்த வினிதா, கடந்த 2014-ம் ஆண்டு பிளஸ் 2 படிப்பு முடித்து, கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்து விட்டு, தனியார் கம்பெனி ஒன்றில் தற்காலிகமாக வேலைக்கு சென்று வந்தார். அந்தாண்டு ஜூன் 23-ம் தேதியன்று, வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது வழிமறித்த ராமசந்திரன் என்பவர், வினிதாவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகரன், குற்றவாளி ராமசந்திரனுக்கு வினிதாவை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இறக்கும் வரை ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக மற்றொரு ஆயுள் தண்டணையும் வழங்கி தீர்ப்பு வழங்கினார்.


 

Leave a Response