மலையாளப்படம் ரீமேக்கில் அரவிந்த்சாமி


aravind-swamy_3x2மலையாளத்தில் வெளியான ’பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படத்தின் ரீமேக்கில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளார்.

சித்திக் இயக்கிய இப்படத்தில் மம்முட்டி, நயந்தாரா, என்னை அறிந்தால் படத்தில் நடித்த குழந்தை ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்தப்படம் மலையளத்தில் பெரும் வெற்றியைப் பெற்றது.

மலையாளத்தில் இயக்கிய சித்திகே இப்படத்தை தமிழிலும் இயக்கவிருக்கிறார். சித்திக் தமிழில் ஏற்கனவே ஃப்ரெண்ட்ஸ், எங்கள் அண்ணா, சாது மிரண்டா, காவலன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மம்முட்டி நடித்த கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிகிறார். தற்போது ’போகன்’ படத்தையடுத்து ’சதுரங்கவேட்டை-2’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ’பாஸ்கர் தி ராஸ்கல்’ ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.


 

Leave a Response