காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமாகமானவர் சுனைனா. அதன் பிறகு மாசிலாமணி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார்.
ஸ்ரீகாந்துடன் நடித்த நம்பியார் படம் தாமதமாகியதனால் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காமல் தவித்தார்.
விஜய்யின் தெறி படத்தில் ஒரு சீனுக்கு வந்து போனவர் சமீபத்தில் வெளியான கவலை வேண்டாம் படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார். வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் சுனைனா நடிப்பதற்கு தான் விதித்திருந்த சில கட்டுபாடுகளை தளர்த்தியிருக்கிறார். கிளாமருக்கு இதுவரை நோ சொல்லி வந்தவர் இனி அதற்கு தயார் என்றும் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடவும் ரெடி என்றும் சொல்லி வருகிறார்.