கண்முன் சூப்பர்ஸ்டார் ஆனவர் சிவகார்த்திகேயன் ; சமந்தா


remo-audioதன் கண் முன்பு ஒரு ஸ்டார் சூப்பர்ஸ்டார் ஆனார் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்கு வெளியீட்டு உரிமையை டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு பெற்றுள்ளார்.

இந்நிலையில் ரெமோ இசை வெளியீட்டு விழாவில் சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

நான் நடிக்க வந்ததில் இருந்து ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டார் ஆனதை பார்க்கவில்லை. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளதை பார்க்கிறேன்.

சிவகார்த்திகேயனுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிவகார்த்திகேயன் ஒரு பெரிய ஸ்டாராக இருந்தாலும் மிகவும் எளிமையானவர். அதற்க்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

ரெமோ தெலுங்கு டப்பிங் படம் போல எனக்கு தெரியவில்லை. இந்த படத்தை தில் ராஜு மற்றும் ஆர்.டி. ராஜா ஆகியோர் பெரிய அளவில் விளம்பரப்படுத்துகிறார்கள் என்றார் சமந்தா.


 

Leave a Response