“கெத்து” திரைப்பட விமர்சனம்:

Gethu Review
நடிகர்கள்: சத்யராஜ், உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், விக்ராந்த், ராஜேஷ், கருணாகரன், சச்சு, வாசு விக்ரம், பிரகதி,அனுராதா, மைம் கோபி, பெசன்ட் நகர் ரவி, ஆடுகளம் நரேன், சரத் ஹக்சர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்: இயக்குனர் – K.திருக்குமரன், ஒளிப்பதிவு – M.சுகுமார், படத்தொகுப்பு – P.தினேஷ், பாடல்கள் – தாமரை, கானா வினோத், சீற்காழி சிற்பி, வே.பத்மாவதி, G.பிரபா, M.C.விக்கி. நடனம் – ஷோபி, பாபா பாஸ்கர், சண்டை பயிற்சி – இரட்டையர்கள் அன்பு மற்றும் அறிவு.

படம் தென் தமிழ் நாட்டின் கம்பம் பள்ளத்தாக்கு கூடலூர் பகுதியில் நடைபெறுகிறது. சத்யராஜ் ஒரு பள்ளியின் PET (உடற்பயிற்சி) ஆசிரியராக வருகிறார். அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் அதே ஊரில் ராஜேஷ் நடத்தும் “பென்னி குய்க்” லைப்ரரியில் பணியாற்றுகிறார்.

வெளிநாட்டினரை அதிரவைத்த பொக்ரான் அணுகுண்டை வெடிக்கவைத்து சோதனை செய்த அப்துல் கமாலாக ஒருவர். இவரை கொலை செய்ய வெளிநாட்டு அந்நிய சக்தி ஒன்று, விக்ராந்தை ஒப்பந்தம் செய்கிறது. அப்துல் கமால் தான் எழுதிய “அக்னி இறகுகள்” என்ற புத்தகத்தில் தன்னுடைய ஆசிரியரான ஜான் மேத்யூவை (ராஜேஷ்) பற்றி குறிப்பு ஒன்றை எழுதிகிறார். அதில் “குடும்பத்தினர் யாரும் இன்றி தனியாக வாழும் ஜான் மேத்யூவின் மறைவுக்குப் பின், அவருக்கு ஒரு மகனின் ஸ்தானத்தில் இருந்து இறுதிச் சடங்குகளை செய்வேன்” என்று அப்துல் கமால் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஷயத்தை அறிந்த விக்ராந்த் கம்பம் பகுதிக்கு வந்து முகாமிட்டு ஜான் மேத்யூவை கொள்ள சதி செய்கிறார். பள்ளி அருகில் இருக்கும் மதுபான கடையை மூட சொல்லி சத்யராஜ் காவல்துறையிடம் புகார் கொடுக்குறார். அந்த பிரச்சனை முற்றி மைம் கோபி மற்றும் அவர் அண்ணனை, சத்யராஜ் மற்றும் உதயநிதி இருவரும் அடித்து தும்சம் செய்கின்றனர். மீண்டும் பள்ளி அருகில் மதுபான கடையை திறந்தாள் கொன்றுவிடுவேன் என்று சத்யராஜ் சவால் விடுகிறார்.

விக்ராந்தின் கொலை திட்டத்துக்கு இடையூறாக இருக்கும் மைம் கோபியை கொள்ளுகிறார் விக்ராந்த். இந்த கொலை பழி, சவால் விட்ட சத்யராஜ் மீது விழ அவரோ சிறையில் அடைக்கப்படுகிறார். ஆங்கங்கே உதயநிதிக்கும் எமி ஜாக்சனுக்குமான காதல் வந்து செல்கிறது.

சிறைக்கு சென்ற சத்யராஜ் என்ன ஆகிறார். விஞ்ஞானி அப்துல் கமால் என்ன ஆகிறார், அவரை கொள்ள வந்தவன் விக்ராந்த் என்ன ஆகிறார் என்பது தான் மீதமுள்ள கதை.

உதயநிதியின் நடிப்பு இந்த படத்தின் மூலமாக ஒரு ப்ரோமோஷன். அது தான் அஸ் அக்ஷன் ஹீரோ! இது நாள் வரை டரில் செய்வது போல் நடனமாடிய உதயநிதி இந்த படத்தில் முன்பை விட மிக நன்றாகவே நடனமாடியுள்ளார். உதயநிதியையும் சரி விக்ராந்தையும் சரி சண்டை காட்சிகளில் பிழிந்து எடுத்து நல்ல காட்சிகளை அமைத்துள்ளனர் சண்டை பயிற்சி இயக்குனர்களான இரட்டையர்கள் அன்பு அறிவு.

சத்யராஜ் கதாபாத்திரத்தில் அவருடைய பங்கு பற்றி பெரியதாக பேசுவதற்கு ஒன்றும் இல்லை. இருப்பினும் சண்டை காட்சி ஒன்றில் சத்யராஜ் பின்னுகிறார். எமி ஜாக்சன் நடிப்பிலும் சரி அழகிலும் சரி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒன்றும் இல்லை. மைம் கோபி மற்றும் அவருடைய அன்னானாக வருபவர் கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு. மைம் கோபியின் நடிப்பில் யதார்த்தம் பதிந்துள்ளது. கருணாகரன் இந்த படத்தில் காமெடி இல்லாமல் சீரியஸ் கதாபாத்திரம் ஏற்றுக்கொண்டு தன்னுடைய பங்கை குறையின்றி செய்துள்ளார்.

விக்ராந்திற்கு இரண்டு அல்லது மூன்று காட்சிகளில் தான் வசனம். இருப்பினும் உடல்பாவனத்தில் தக்கவைதுக்கிறார் விக்ராந்த்.

சுகுமாரின் ஒளிப்பதிவு “கெத்து” படத்திற்கு உண்மையில் கொடுத்திருக்கிறது கெத்து. ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு பெரிய ப்ளஸ். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அஸ் யுஷல். சொல்லும்படியாக ஒன்னும் இசையில் அதிசியம் இல்லை. திரைக்கதையில் சோர்வு, அப்பட்டமாக தெரிகிறது. ஒளிப்பதிவாளர் சுகுமாரின் கைவண்ணம் மற்றும் உதயநிதியின் நடிப்பு, நடனம், சண்டை காட்சிகளின் முன்னேற்றம் படத்தை ஓர் அளவிற்கு காப்பாற்றும் என்று சொல்லலாம். “கெத்து” படத்தை ஒரு முறை நம்பி பார்க்கலாம்.

Leave a Response