“ரஜினி முருகன்” திரைப்பட விமர்சனம்:

Rajini Murugan Review
நடிகர்கள்: ரஜினிமுருகனாக சிவகார்த்திகேயன், கார்த்திகா தேவியாக கீர்த்தி சுரேஷ், அய்யன்கலையாக ராஜ்கிரண், தூதாதிரியாக சூரி, ஏழரை மூக்கனாக சமுத்திரகனி, சிவகார்த்திகேயன் தந்தை மல்லிகைராஜனாக ஞானசம்பந்தம், கீர்த்தி சுரேஷ் தந்தை நீலகண்டனாக அச்யுத்தகுமார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: இயக்குனர்: பொன்ராம், ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம், இசை: டி.இமான், பாடல்கள்: யுகபாரதி, படத்தொகுப்பு: விவேக் ஹர்ஷன், தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்காக N.சுபாஷ் சந்திர போஸ்.

ரஜினி ரசிகனான ரஜினிமுருகனும் தூதாதிரியும் வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று சேர்ந்து துடிக்கும் இளைஞர்கள். அயன்கலையாக வரும் ராஜ்கிரண் மூத்த மகன் மல்லிகைராஜன் மட்டும் இந்தியாவில் வசிக்க மற்ற பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அய்யன்கலை ஊரில் ஒரு கவுரவ மிக்க பெரியவராக திகழ்பவர். ரஜினிமுருகனும் கார்த்திகா தேவியும் சிறுவர்களாக இருக்கும் போதே பெரியவர்களால் அவர்களுக்கு சம்மந்தம் பேசி முடிக்கப்படுவிடுகிறது. அவர்கள் இருவரும் சிறுவர்களாக இருக்கும்போதே இவருடைய பெற்றோர்களுக்குமான உறவு முரிந்துவிட இரு குடும்பத்தினிடையே பிளவு ஏற்படுகிறது.

வில்லனாக வரும் ஏழரை மூக்கன், தான் அய்யன்கலையின் பேரன் என்று சொல்லி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி சொத்தில் பங்கு கேட்கும் வில்லனாக வருகிறார். ஏழரை மூக்கனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கப்படுகிறதா, ரஜினி முருகன் – கார்த்திகா தேவி காதல் முடிவு என்ன என்பது தான் மீதமுள்ள கதை.

சிவகார்த்திகேயனும் சூரியும் சேர்ந்து அடிக்கும் லூட்டி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கிறது. கீர்த்தி சுரேஷ் காட்சிக்கு காட்சி அழாகாக தெரிந்தாலும் வயது முதிர்ந்தவராக தெரிகிறார் என்பதில் சந்தேகம் இல்லை. கீர்த்தி சுரேஷின் நடிப்பில் ஏதோ சில பின்னடைவு தெரிகிறது.

எப்போதும் போல தன்னுடைய நடிப்பு மற்றும் உடல் பாவனையில் அசத்துகிறார் நம்ம ராஜ்கிரண். அவருக்கான சண்டை காட்சி இப்படத்திலும் க்ளைமாக்ஸ்சில் சண்டை காட்சி இயக்குனர் சில்வாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் பெரியதாக சொல்லும்படியாக அமையவில்லை என்பதில் மாற்று கருத்தில்லை. கீர்த்தி சுரேஷ் தந்தையாக நடித்திருக்கும் நீலகண்டன் ஒரு ரஜினி ரசிகனாகவும், காட்டமான தந்தையாகவும் தன் பணியை நன்றாக செய்துள்ளார்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு ஒரு பெரிய பிளஸ் மற்றும் பார்வையாளர்கள் கண்களுக்கு குளிர்ச்சி. டி.இமானின் இசை கேட்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இயக்குனர் பொன்ராம் பார்வையாளர்களை திருப்தி படுத்தும் விதமாக “ரஜினி முருகன்” படத்தை கலகலப்பாக தந்துள்ளார்.

Leave a Response