இந்த படம் எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் DSP. இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

அப்போது, சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி தயாரிப்பதாகவும் இணைத் தயாரிப்பாளராக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பெயர் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பு என்று அந்த ட்ரெய்லரில் கூறப்பட்டிருக்கிறது. இதை பற்றி விசாரிக்கையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேரடியாக தயாரிக்கும் படத்தில் மட்டும் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெயர் இடம் பெறும் என்று காரணம் கூறுகிறார்கள்.

அப்படியென்றால் ஏன் படத்தின் அறிவிப்பு வீடியோவில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம் பெற்றது என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை.

எங்கள் ‘ஒற்றன் செய்தி’ குழுவினர் விசாரணை நடத்தி பார்த்ததில், சன் பிக்ச்சர்ஸ் சார்பாக படம் பார்த்தவர்கள் அவர்கள் எதிர்பார்த்ததை போல் படம் இல்லையாம். மொத்தத்தில் படம் ரொம்ப சுமாராம். இப்படிப்பட்ட படத்தை தங்கள் பேனரில் வெளியிட்டால், பிற்காலத்தில் சன் குழுமத்திற்கு இருக்கும் தரம் குறைந்துவிடும் என சொல்லிவிட்டு, நீங்களே படத்தை எடுத்துட்டு போய்டுங்கன்னு சொல்லி சன்பிக்சர்ஸ் நிறுவனம் கழண்டு கொண்டதாம்.

Leave a Response