“போக்கிரி ராஜா” படக்குழுவினர் வழங்கிய வெள்ள நிவாரணம்:

Pokkiri Raja Shooting Spot
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, மானஸா, முனிஸ்காந்த், மனோபாலா, மயில்சாமி, யோகிபாபி, சுஜாதா என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் “போக்கிரி ராஜா” திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ARS கார்டனில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, திலிப் சுப்பராயன் சண்டைபயிற்சியை கவனிக்க, பிருந்தா மற்றும் ஷெரிப் நடனத்தை கவனிக்கின்றனர். கலையை வணராஜாவும், படத்தொகுப்பை சாபு ஜோசப்பும் பார்த்து கொள்கின்றனர்.

ராம்கோபால் வர்மாவுடன் பல வெற்றி படங்களில் பணியாற்றிய ஆஞ்சநேயலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் ராம்பிரகாஷ் ராயப்பா. சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த “தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்” படத்தை இயக்கியவர் தான் இந்த ராம்பிரகாஷ் ராயப்பா என்பது குறிப்பிடத்தக்கது. PTS பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக பி.டி.செல்வகுமார் வழங்க டி.எஸ்.பொன்செல்வி தயாரிக்கிறார்.

இத்திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டிகொண்டிருக்கும் நேரத்தில் நேற்று இப்படத்திற்க்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ARS கார்டன் படப்பிடிப்புத்தளத்தில் நடைப்பெற்றது. அப்போது பேசிய நடிகர் ஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா இயக்குனரின் திறமை பற்றி பாராட்டினார். படம் அறுபது நாட்கள் கடந்து முடிவுபெறும் தருவாயில் உள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் அனைவரும் பேசுகையில் சமீபத்தில் தமிழகத்தை வாட்டி எடுத்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்தனர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு முடிந்தவுடன் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா, ராம்பிரகாஷ் ராயப்பா, ஆஞ்சநேயலு மற்றும் பி.டி.செல்வகுமார் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 1௦௦ பேருக்கு வேட்டி, புடவை, பெட்ஷீட், அரிசி, போன்றவற்றை வழங்கினர்.

Leave a Response