144 திரைவிமர்சனம் – ரம்மியில்லா கார்டில் இருக்கும் டம்மி ஜோக்கர்

144-movie-review

144 திரைப்படம் ஜி.மணிகண்டன் இயக்கத்தில் சி.வி.குமார் தயாரிப்பில் வெளிவந்துள்ளது. சி.வி.குமார் படங்கள் என்றாலே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இதற்கு முன்னர் வந்த படங்கள் இவருக்கு பெற்று தந்த பெயர் அப்படி. இவர் தேர்வு செய்யும் கதைகள், மிகவும் வித்தியாசமாகவும் புதுமையானதாகவும் இருக்கும். சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து பெரிய லாபத்தை ருசிக்கும் கெட்டிக்கார தயாரிப்பாளர் இவர். இவர் கதை தேர்வு செய்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை சினிமாகாரர்கள் மத்தியில் உள்ளது. இப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளர், ஏன் இப்படி ஒரு கதையை தேர்வு செய்தார்? என்று தான் புரியவில்லை.

144 திரைப்படத்தில் புதியதாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே வெளிவந்த கலகலப்பு, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் போன்ற படங்களின் கலவைதான் இப்படம். படத்தில் புதியதாக ஒன்றும் இல்லை. மிர்ச்சி சிவாவும் முனீஸ்காந்தும் தான் படத்தை ஓரளவிற்கு தாங்கி நிற்கின்றனர். அசோக் செல்வன் வழக்கம்போலவே வந்துபோகும் கதாபாத்திரமாகவே உள்ளார். அவரிடம் இன்னும் நடிகருக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மதுரை பாசையில் ஓவியாவையும், ஸ்ருதி ராமகிருஷ்ணனனையும் பேசவைத்திருப்பது ரண கொடூரம். அதிலும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் டப்பிங் பல இடங்களில் லிப்மூவ்மென்ட் மிஸ்ஸிங். ரம்மி இல்லா கார்டில் ஜோக்கர் நிறைய இருந்தால் எப்படி இருக்கும், அதுபோல் தான் உள்ளது இந்தப்படம்.

புதுமுக இயக்குனர் ஜி.மணிகண்டன் அவருடையை பெயரை மட்டுமல்லாமல் சி.வி.குமாரின் பெயரையும் சேர்த்து கெடுத்துவைத்துள்ளார். இந்த கதையை கேட்கும்போதே தெரிந்திருக்கும், இதற்குமுன் எடுக்கப்பட்ட கதை தான் என்று. அப்படி இருந்து இந்த கதையை சி.வி.குமார் தெரிந்தே தேர்வு செய்தாரா? இல்லை வேறு ஏதாவது காரணமா? என்று தான் தெரியவில்லை.

மொத்தத்தில் இந்தப்படம் ரம்மியில்லா கார்டில் இருக்கும் டம்மி ஜோக்கர்.

Satheesh Srini

Leave a Response